முகப்பு
தமிழ்நாடு

மகளிருக்கு ரூ.3000 உரிமைத்தொகை: அதிமுக தேர்தல் அறிக்கை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Updated On : 22 மார்ச், 2024 at 6:35 AM
பகிர்:

மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னர் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், மகளிருக்கு ரூ.3000 உரிமைத்தொகை, சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், நீட்டுக்கு மாற்று தேர்வு முறை உள்ளிட்டவைகள் முக்கிய வாக்குறுதிகளாக இடம் பெற்றுள்ளன.

மேலும், ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்துக் கேட்க வேண்டும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தல், வழக்காடு மொழியாக தமிழ் மொழி இடம் பெற வேண்டும் உள்ளிட்டவைகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.