தமிழ்நாடு

ஜனநாயகத்தைக் காத்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி: ஸ்டாலின்

DIN

ஜனநாயகத்தைக் காத்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்ற நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில்,

அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த தசாப்தத்தில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சித் தத்துவம் வாடிப் போவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசுகளின் செயல்பாட்டிற்கு முன் கூர்முனைகளை வைக்கும் தவறான செயல்பாடுகளையும் கண்டுவந்துள்ளனர்.

வரும் தேர்தல் 2024 ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது.

நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற மிக எளிய நிகழ்ச்சியில், மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் பொன்முடி. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பொன்முடிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எளிய விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். மீண்டும் அமைச்சரான பொன்முடிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்த நிலையில், உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகே, பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் ஆளுநர். இதனை சுட்டிக்காட்டும் வகையில், தமிழக முதல்வரின் இந்தப் பதவு அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

தோல்விக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம் என்ன தெரியுமா?

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

SCROLL FOR NEXT