தமிழ்நாடு

நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்

DIN

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

முன்னதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேட்பாளர் ஜான்சி ராணி, திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்லா முத்துச்சோழன், திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குண பாண்டியனின் 2-வது மருமகள்.

2016 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். திமுகவில் வடசென்னை பகுதி பிரசாரக் குழு செயலாளராக இருந்து கடந்த பத்து நாட்களுக்கு முன் அவர் அதிமுகவில் இணைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

நினைவின் மயக்கம்... ஸ்ரீகெளரி பிரியா!

SCROLL FOR NEXT