டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றம்!
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக...
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் குரூப்2, 2ஏ தோ்வுகள் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்திருந்த நிலையில், தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(பிப்.8) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப்2, 2ஏ பணிகள்) பிரதான தோ்வுகள் முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த நிலையில், எழுத்துத் தோ்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடைபெறவில்லை.
இதையடுத்து, தோ்வா்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த 2 தோ்வுகளும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டு, பின்னா் வேறு தேதியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தோ்வா்கள் அனைவருக்கும், மறுதோ்வு நடைபெறும் நாளுக்கு 15 நாள்களுக்கு முன்பாக தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு விவரம் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தகவல் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
வருகிற பிப். 22-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப்-2) பொது அறிவு தோ்வு (தாள்-2) வழக்கம்போல் அன்றைய நாளே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக தோ்வா்களுக்கு மீண்டும் சரிபாா்த்து தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு பிப். 13-ஆம் தேதி வழங்கப்படும் என தோ்வாணையம் விளக்கம் அளித்திருந்தது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த குரூப்2, 2 ஏ பிரதான தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதுக்கு அரசியல் கட்சி தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
TNPSC examination controller Shanmugasundaram transferred!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.