டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறித்து....
தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பணிகளான துணை ஆட்சியர்(12), வணிக வரித்துறை உதவி ஆணையர்(2), கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர்(3), மாவட்டப் பதிவாளர்(8), தொழிலாளர் நல உதவி ஆணையர்(1) ஆகிய 5 பதவிகளில் காலியாக உள்ள 26 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிப்பை கடந்த ஜூன் 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதற்கான விண்ணப்பத்தை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன்(ஜூலை 29) நிறைவடைகிறது.
ஆகஸ்ட் 2 முதல் 4-ஆம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம். மேலும் செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து நிலையில், தற்போது செப்டம்பர் 27 -ஆம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. அதையடுத்து முதன்மைத் தேர்வு குறித்து அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
மேற்கண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வணிக வரித்துறை உதவி ஆணையர் பதவிக்கு விண்ணப்பிப்போர் வரிவிதிப்புச் சட்டங்கள் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பானது 21 முதல் 34-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் www.tnpsc.gov.in அல்லது tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர், ஒருமுறைப் பதிவில் தங்களது பதிவு எண்ணை சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும்.விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களின் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனுடன் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அரசுப் பணியாளர் போன்ற சிறப்புப் பிரிவு தேர்வர்கள் அதற்கான சான்றிதழ் விவரங்களை அளிக்க வேண்டும்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Today is the last day to apply for the TNPSC Group-1 exam...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.