FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரயில்பெட்டி தொழிற்சாலையில் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ரயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி - கோப்புப்படம்
பகிர்:

கபூர்தலாவில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலை பணிமனைகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட டிரேடுகளில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரம் வருமாறு:

அறிவிப்பு எண்.: A-1/2026

Advertisement

Advertisement

பயிற்சியின் பெயர்: Trade Apprentice

மொத்த காலியிடங்கள்: 734

வயதுவரம்பு: 5.9.2026 தேதியின்படி 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். தகுதியானவர்களை தேர்வு செய்ய நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். நேர்முகத்தேர்வு தொடர்பான விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.rcf.indianrailways.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். அதற்கு முன்னர் www.apprenticeship indian.gov.in இணையதளத்தில் ஐடிஐ தகுதியை பதிவு செய்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.9.2026

summary

Online Application are invited in the prescribed format for engagement of 734 Act-Apprentices for...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments