அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன். 
தமிழ்நாடு

தேனியில் டிடிவி தினகரன் போட்டி!

தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

DIN

தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளிலும், 4 கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்திலும், பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழு ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

பாரதிய ஜனதா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் மார்ச் 20-ல் கையெழுத்தானது. இதில் அமமுகவுக்கு 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

செந்தில் நாதன்

அமமுகவுக்கு தேனி, திருச்சி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடவுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இன்று தெரிவித்துள்ளார்.

தேனி மற்றும் திருச்சியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி, தேனியில் டிடிவி தினகரனும், திருச்சியில் செந்தில் நாதனும் போட்டியிடுகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு நன்றிக் கடனாக தேனி தொகுதியை கொடுத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக்குழு (ஓபிஎஸ்) சாா்பில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீா்செல்வம் போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

50 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ரயில்வே துறைக்கு புத்துயிர்: அஸ்வினி வைஷ்ணவ்

SCROLL FOR NEXT