தமிழ்நாடு

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் துரை. ரவிக்குமார் வேட்பு மனுத் தாக்கல்

DIN

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை ரவிக்குமார் இன்று மனுத் தாக்கல் செய்தார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை. ரவிக்குமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனியிடம் திங்கள்கிழமை அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அப்போது உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குலாம் மொய்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக திருச்சி சாலையிலுள்ள கலைஞர் அறிவாலயத்திலிருந்து அமைச்சர் பொன்முடி தலைமையில் கூட்டணிக் கட்சியினர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்தனர். இதில் எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா. லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT