முகப்பு
தமிழ்நாடு

கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

Updated On : 27 மார்ச், 2024 at 6:37 AM
பகிர்:

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 நடைபெறவுள்ளது. இந்த முறை பாஜக தனித்து போட்டியிடுவதால் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை களம் காண்கிறார்.

இதற்கான வேட்புமனுவை கோவை தேர்தல் அலுவலர் கிராந்திகுமாரிடம் அண்ணாமலை இன்று தாக்கல் செய்தார்.

அவருடன் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →