கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சே. ஜோதிமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் பலரும் மும்மரமாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சே. ஜோதிமணி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மீ. தங்கவேலிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அவருடன் அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.