பிரேமலதா  
தமிழ்நாடு

மார்ச் 29 முதல் பிரேமலதா பிரசாரம்!

நீலகிரியில் பிரசாரத்தை தொடங்கும் பிரேமலதா, விருதுநகரில் நிறைவு செய்கிறார்.

DIN

தேமுதிக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை முதல் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விருதுநகரில் விஜயகாந்த் - பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கி கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29 முதல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மார்ச் 29 நீலகிரி மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் பிரேமலதா, ஏப்ரல் 17 விருதுநகரில் நிறைவு செய்யும் விதமாக பிரசார அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT