தேமுதிக கூட்டணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பிரேமலதா பேசுகையில் "தேர்தல் தேதி அறிவிக்கவில்லை; யார் யார் எந்தெந்த தொகுதி? வேட்பாளர்கள் என எதுவும் அறிவிக்கப்படவில்லை. நமக்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது. பிப்ரவரி 28-க்கு பிறகுதான், தேதியை உறுதிசெய்ய உள்ளனர்.
தேமுதிக எங்கள் குழந்தை. தேமுதிக-வுக்கு என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்ற கடமைகள் 'அம்மா'வாக எனக்கு அதிகமிருக்கிறது. ஆகையால், உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை அமைப்போம்.
எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணியை வேண்டுமானாலும் அமைக்கலாம். நிச்சயமாக, தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும்வகையில், ஒரு நல்ல முடிவை எடுப்போம்" என்று தெரிவித்தார்.
மேலும், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாததால், கூட்டணியில் தேமுதிக இல்லையா என்ற கேள்விக்கு, அதுவும் முடிவுபெறவில்லை என்று பிரேமலதா கூறினார். தொடர்ந்து, கூட்டணி முடிவுபெற்றதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.