கணேசமூா்த்தி 
தமிழ்நாடு

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி காலமானார்

DIN

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி சிகிச்சை பலனின்றி வியாழன் அதிகாலை காலமானார்.

திடீா் உடல் நலக்குறைவு காரணமாக கோவை தனியாா் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவா் அனுமதிக்கப்பட்டாா்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 72 மணி நேர தீவிர கண்காணிப்பில் இருந்த கணேசமூா்த்தி வியாழன் அதிகாலை 5.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவு கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணேசமூா்த்தி விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அது தொடா்பாக ஈரோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே மதிமுக பொதுச்செயலாளா் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வருகின்றாா். உடனடியாக மருத்துவமனைக்கு அவா் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தகட்ட நடவடிக்கை செப். 15-இல் அறிவிப்பு: மல்லை சத்யா

தனிநபா் பிரிவில் இந்தியா்கள் ஏமாற்றம்!

4 புதிய உருளைக்கிழங்கு ரகங்கள்: மத்திய அரசு அனுமதி

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்தியா 3-ஆம் இடம்!

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: காலிறுதியில் ஜாஸ்மின்

SCROLL FOR NEXT