தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் உழைப்பாளர் நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்களும், பல்வேறு முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு தொழிலாளர்கள் நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் எக்ஸ் தளத்தில் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.