தமிழ்நாடு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

வெப்ப அலை காரணமாக அசெளகரியம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் மே 3-ஆம் தேதி வரை வெப்ப அலை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் நேற்று மட்டும் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு வடதமிழக உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை அதிகரிக்கக்கூடும். அதன்பிறகு 2 நாள்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மே 3-ஆம் தேதி வரை வடதமிழக உள்மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை காரணமாக அசெளகரியமான சூழல் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

SCROLL FOR NEXT