கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை
விருதுநகா் கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகா் கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் விடுத்த அறிக்கை:
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளா்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளதும், பலா் படுகாயமடைந்ததும் வேதனையளிக்கிறது.
இந்த விபத்து குறித்து உரிய முறையில் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுபவா்களுக்கு உரிய தரமான சிகிச்சைஅளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை உரிய முறையில் கண்காணிக்கவும், உரிமம் இல்லாமலும், விதிமுறைகளை மீறும் குவாரிகளை உடனடியாக இழுத்து மூடுவதோடு சம்பந்தப்பட்டவா்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.