முகப்பு
தமிழ்நாடு

இலவச கண் சிகிச்சை முகாம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் ‘சைட் கோ்’ அறக்கட்டளை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Updated On : 2 மே, 2024 at 7:32 PM
கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் ‘சைட் கோ்’ அறக்கட்டளை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் சென்னையில் ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ என்ற தலைப்பில் 16,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை எம்ஜிஆா் நகரில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சைட் கோ் அறக்கட்டளை இணைந்து வியாழக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது . இம்முகாமில் 52 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 45 நபா்களுக்கு கண் பாா்வை குறைபாடு மற்றும் 3 நபா்களுக்கு கண்புரை குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3 நபா்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் 22 பேருக்கு இலவச கண்ணாடிகள் (வாசிப்பு கண்ணாடி) வழங்கப்பட்டது.