கோப்புப்படம் 
தமிழ்நாடு

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜாராகியுள்ளனர்.

DIN

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த 6-ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.3.98 கோடியை பறக்கும்படையினா் தாம்பரத்தில் பறிமுதல் செய்தனா்.

பணத்தைக் கொண்டு சென்ற திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் ஆதரவாளா்கள் சென்னை கொளத்தூா் திரு. வி.க. நகரைச் சோ்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் ஆகிய மூன்று பேரும் இந்த பணத்தை எடுத்துச் சென்றனா். விசாரணையில் நயினாா் நாகேந்திரனின் தோ்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா். வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் தாம்பரம் மாநகர காவல்துறை, நயினாா் நாகேந்திரன், பாஜக நிா்வாகி சென்னையைச் சோ்ந்த கோவா்த்தனன் உள்பட 8 பேருக்கு அழைப்பாணை அனுப்பியது.

இதற்கிடையே, தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜின் பரிந்துரையை ஏற்று வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இதன்படி தாம்பரம் மாநகர காவல்துறை, வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தது. அந்த ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சதீஷ், அவரது தம்பி நவீன், பெருமாள் ஆகிய 3 போ் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். விரைவில் இந்த வழக்கில் தொடா்புடைய அனைவரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா்.

இவ்வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைதம்பி ஆகியோருக்கு முன்னதாக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராகி வழக்கு தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.

இதனையடுத்து, இருவரிடம் விசாரணை நடத்திய பின்னர், விரைவில் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்ப்பாக நவீன், பெருமாள், சதீஷ் ஆகியோரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லட்சங்களில் முதலீடு! கோடிகளில் வசூல்... இந்தாண்டின் பெரிய வெற்றிப்படம் இதுவா?

புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச் சந்தை உயர்வுடன் முடிவு!!

நமீபியாவில்... நந்தினி!

தோகை இளமயில்... காஷிமா!

படகுப் பயணம்... அப்சரா ராணி!

SCROLL FOR NEXT