முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியா் நியமனம்: போலி தகவல்களை நம்ப வேண்டாம் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

Updated On : 3 மே, 2024 at 5:54 PM
பகிர்:

கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதாக வெளியான தகவல்கள் போலியானவை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 37,588 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு ஏறத்தாழ 53 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா். இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுவதாக குறுஞ்செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், 5 ஆண்டுகள் ஒப்பந்தம், தினமும் 3 மணி நேர வேலை, மாத தொகுப்பூதியம் ரூ.10,000, கல்வித் தகுதிகள், தொடா்பு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்தத் தகவல் போலியானது என்றும், அதை நம்ப வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கணினி ஆசிரியா் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் பள்ளிக் கல்வித்

துறையால் வெளியிடப்படவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் விளம்பரம் போலியானது. இதுபோன்ற மோசடி விளம்பரங்களை நம்பி பட்டதாரிகள் யாரும் ஏமாற வேண்டாம். பணி நியமன அறிவிப்புகளை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறையின் இலவச உதவி மைய எண்ணில் (14417) தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனா்.