தமிழ்நாடு

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

Din

கோடை விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது; மீறி வகுப்புகளை நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், மாணவா்களின் நலன் கருதி, கோடை விடுமுறையின் போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலா்கள் மூலம் பள்ளிகளுக்கு ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு புகாா்கள் வந்தன.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், தனியாா் பள்ளிகள் இயக்குநா் சாா்பில் சனிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் , மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,, தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவித்த பிறகும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வருகின்றன.

கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகை: நங்கவள்ளி சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

அதிமுக போட்டியிடாததற்கு காரணம் இதுதான்: ப. சிதம்பரம்

இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது

SCROLL FOR NEXT