பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதில், திருச்சி மாவட்டத்தில் 95.74% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் 13, 371, பெண்கள் 16.244 என மொத்தம் 29, 615 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 12,491 பேர் (93.42%), பெண்கள் 15,863 (97.65%) என மொத்தம் 28.354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.74 சதவிகித தேர்ச்சியாகும்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதிய 4,775 மாணவர்களில் 4253 பேரும், மாணவியர் 5,589 பேரில் 5,329 பேரும் என மொத்தம் 10,364 பேருக்கு 9.582 பேர் (92.45 %) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
மாநில அளவில் 13 ஆவது இடம்:
திருச்சி மாவட்டம் தமிழக அளவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் 13 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2021 - 22 கல்வியாண்டில் 95. 93% தேர்ச்சி பெற்று 12-ஆவது இடத்தையும், 2022 -23 கல்வியாண்டில் 96.02 % தேர்ச்சி பெற்று 13 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. நிகழாண்டும் 95.74 % தேர்ச்சியை பெற்று அதே 13 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.