கோப்புப் படம். 
தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

DIN

தஞ்சாவூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்டத்தில் 227 பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆயிரத்து 734 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 24 ஆயிரத்து 52 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.46 சதவீதம். கடந்த ஆண்டை விட, நிகழாண்டில் 1.72 சதவீதம் குறைந்துள்ளது.

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11 ஆயிரத்து 819 மாணவர்களில் 10 ஆயிரத்து 710 பேரும், 13 ஆயிரத்து 915 மாணவிகளில் 13 ஆயிரத்து 342 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்களில் 93.62 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.88 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்தனர்.

வழக்கம்போல, நிகழாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு:சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!செய்திகள் சில வரிகளில்| 7.8.25 | Rahulgandhi | MKStalin

ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?

பாஜகவின் பிரதிநிதியாக தேர்தல் ஆணையம்! - கார்கே விமர்சனம்

சுதந்திர நாள் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் வேண்டும்! திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்!

SCROLL FOR NEXT