தமிழ்நாடு

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை காவல்துறையினா் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மர்ம மரணமடைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய 2ஆவது கடிதத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கடிதத்தின் பேரிலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான விசாரணைக்கு கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மூத்த மகன் கருப்பையா ஜெப்ரின், இளைய மகன் மார்ட்டினிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்தை மறித்த யானைகள்! பதற்றமான நொடிகள்! | CBE

கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

எஸ்400 வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை!

யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டம்

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.79,000-ஐ நெருங்குகிறது!

SCROLL FOR NEXT