கோப்புப்படம் 
தமிழ்நாடு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

பழுதடைந்த கேமிராக்கள் உடனடியாக தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் மாற்றப்பட்டது.

DIN

தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் புதன்கிழமை நள்ளிரவு பழுதடைந்தது.

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ’ஸ்ட்ராங் ரூம்’மில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் மொத்தம் 210 கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இரு கேமிராக்கள் நேற்று நள்ளிரவு பழுதடைந்தது.

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கேமிராக்கள் பழுதடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களின் முன்னிலையில் கேமிராக்கள் வியாழக்கிழமை காலை மாற்றப்பட்டுள்ளது.

தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று மையங்களிலும் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் விபத்து: சூலூர் விமானப் படை தளத்தில் விங் கமாண்டர் உடலுக்கு அரசு மரியாதை!

தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! மற்ற மாவட்டங்களில்..?

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

SCROLL FOR NEXT