விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பயங்கர வெடி விபத்து நேரிட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 7 அறைகள் தரைமட்டமாகின. இதுவரை 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கமலப்பட்டி விபத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருப்பதால், அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.