தமிழ்நாடு

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

புதுச்சேரி மற்றும் காரைக்காலின் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 89.14.

DIN

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 14,952 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்களில் 13,328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 89.14, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிதம் 78.08 ஆகும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 90 எனவும், காரைக்காலில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 17 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 9 லட்சம் மாணவ, மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெளடி வெட்டிக் கொலை: சிறுவன் உள்பட 12 போ் கைது

மின்சார ரயில் மோதி 4 மாடுகள் உயிரிழப்பு: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மது போதையில் மனைவி மீது தாக்குதல்

ஆக.10-இல் மாநில செஸ் போட்டி

தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடு செய்யுங்கள் முதலீட்டாளா்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

SCROLL FOR NEXT