தமிழ்நாடு

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

கெங்கவல்லி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்டவெடி விபத்தில் ஒருவர் பலியானார்.

DIN

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் மேற்கு காடு பகுதியில் வசிப்பவர் தனசேகரன். இவர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது சொந்தமான விவசாய தோட்டத்தில் பட்டாசு செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று(மே 16) அவரது பட்டாசு ஆலையில் மூலப் பொருள்களை எடுப்பதற்காக கூலமேடு கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் சென்று உள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பட்டாசு ஆலை முற்றிலும் வெடித்து சிதறி உள்ளது. இந்த விபத்தில் ராஜமாணிக்கம் என்பவர் தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், சத்தியா, விஜயா ஆகிய இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கெங்கவல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT