தமிழ்நாடு

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

கோடை மழையால் 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு மதுரமங்கலம், சிவன் கூடல் , ஜம்போடை, மேல் மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மீது தார்பாய் பொடாமால் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சுங்குவார்சத்திரம், மதுரமங்கலம், ராமானுஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

இதனால் ராமராஜபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 5000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன. மழையில் நினைந்து சேதமான நெல்மணிகளில் முளைப்பு ஏற்பட்டால் வீணாகப் போய்விடும் எனவும், இதனால் அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் நெல் கொள்முதல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

SCROLL FOR NEXT