முகப்பு
தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

Updated On : 17 மே, 2024 at 1:13 PM
பகிர்:

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறையில் வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும் எனும் மனுவை கோவை சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.

தேனி அருகேயுள்ள பூதிபுரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த யூடியூபா் சவுக்கு சங்கா் கஞ்சா வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனிடையே, அவா் தனக்குப் பிணை வழங்கக் கோரி, மதுரை போதைப்பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை வருகிற 20- ஆம் தேதிக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →