கோப்புப்படம் 
தமிழ்நாடு

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மழைக்கான எச்சரிக்கையை பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்துள்ளது.

DIN

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் 3 நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், விருதுநகர் மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் அம்மாவட்ட மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT