முகப்பு
தமிழ்நாடு

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

பிரசித்தி பெற்ற அருள்மிகு உத்தமர் திருக்கோயிலில் வைகாசி திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

பிரசித்தி பெற்ற அருள்மிகு உத்தமர் திருக்கோயிலில் வைகாசி திருத்தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 21 மே, 2024 at 8:02 AM
பகிர்:

மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற அருள்மிகு உத்தமர் திருக்கோயிலில் வைகாசி திருத்தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு உத்தமர் திருக்கோயில்.

மும்முர்த்திகள், முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற திருத்தலம். இத்திருக்கோயிலில் வைகாசி தேர்திருவிழா மே13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று(மே 21) நடைபெற்றது.

அருள்மிகு செளந்தர்ய பார்வதி உடனுறை பிச்சாண்வேஸ்ரர் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேர் திருவிழாவில் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →