தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகிறது புயல்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர புயலாக வலுப்பெறும்.

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, கோடை மழை பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகின்றது. இதனால், பூமி குளிர்ச்சியடைந்துள்ளது. மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக நாளை மாறி, பின்னர் வடகிழக்குப் பகுதியில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.

தீவிரமாக வலுப்பெறும் புயலானது மே 26-ம் தேதி மாலை வங்கதேசத்திற்கு அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் வடக்குப்பகுதியில் நகரும்போது தமிழகத்தில் மழை குறைந்து, வெப்பம் அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிர புயலுக்கு "ரெமல்" என பெயர் சூடடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT