ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த புயல் சின்னம்!
வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் வலுவிழந்தது தொடர்பாக...
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தப் புயல் சின்னம் சனிக்கழமை பிற்பகலில் வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே முல்லைத் தீவுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று (ஜன. 11) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது