உதகை மலை ரயில் 
தமிழ்நாடு

உதகை மலை ரயில் இன்று ரத்து!

தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மண்களும் சரிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மேட்டுப்பாளையம் - உதகை இடையே இன்று காலை 7.10 மணிக்கு புறப்படவிருந்த ரயிலும், உதகை - மேட்டுபாளையம் இடையே இன்று பகல் 2 மணிக்கு புறப்படவுள்ள ரயிலும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தண்டவாளத்தில் சரிந்துள்ள பாறைகள் மற்றும் மண்களை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 17 ஆம் தேதி பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை நேற்றுதான் மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT