சென்னையில் சுட்டெரித்த வெயில்! 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!
நாளை 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று(மே 29) அதிகபட்சமாக சென்னை மீனம்பாகத்தில் (41.6 டிகிரி செல்சியஸ்) 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட், திருத்தணி, மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட், பரங்கிப்பேட்டை 103 டிகிரி ஃபாரன்ஹீட், புதுச்சேரி 102 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோடு 102 டிகிரி ஃபாரன்ஹீட்,வேலூர், நாகை, திருச்சியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதனிடையே, ஜூன் 2 வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 1, 2 நாள்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.