தியானத்தில் மோடி 
தமிழ்நாடு

பிரதமர் மோடியின் முதல் தியான புகைப்படம் வெளியானது!

குமரியில் விவேகானந்தர் பாறையில் தியானத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடியின் முதல் படம் வெளியானது.

DIN

கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் தியானத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடியின் முதல் புகைப்படம் வெளியானது.

ன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 7 மணிக்குத் தொடங்கினார்.

இரவு முழுவதும் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இன்று அதிகாலை, விவேகானந்தர் மண்டபத்தில் சூரிய நமஸ்காரம் செய்து சூரியனை வழிபாடு செய்தார்.

சுவாமி விவேகானந்தர் 1892ஆம் ஆண்டு கன்னியாகுமரிரயில் உள்ள இதே பாறையில் 3 நாள்கள் தியானம் செய்த பிறகு அமெரிக்காவின் சிகாகோ ஆன்மிக மாநாட்டில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.

இதை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடியும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட தீர்மானித்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரம் முடிந்தபிறகு உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேராக அவர் குமரி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அங்கிருந்து தனிப்படகில் விவேகானந்தா் மண்டபத்தை அடைந்தார். மாலை சுமார் 6 மணிக்கு விவேகானந்தா் பாறைக்கு வந்த பிரதமா் மோடி தியான மண்டபத்தில் அமா்ந்து தியானத்தை தொடங்கினார்.

ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தொடா்ந்து 45 மணி நேரம் தியானத்தில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தியான அரங்கில் புதிதாக குளிா்சாதன வசதி செய்யப்பட்டது. மேலும் பிரதமா் தங்குவதற்காக அங்குள்ள அறை ஒன்றிலும் குளிா்சாதன வசதி செய்யப்பட்டது. மேலும் விவேகானந்தா் மண்டபத்தில் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினரும் தேவையான ஏற்பாடுகளை செய்யப்பட்டது.

நேற்று இரவு தியானத்தில் ஈடுபட்டிருந்த மோடி, இன்று காலை கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய வழிபாடு செய்தார். அது தொடர்பான புகைப்படங்களும் விடியோக்களும் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT