கோப்புப்படம். Din
தமிழ்நாடு

மதுரை, திருச்சியிலிருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில்கள்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாளை(நவ.03) மதுரை மற்றும் திருச்சியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளன.

DIN

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாளை(நவ.03) மதுரை மற்றும் திருச்சியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர் சென்றனர்.

கேரளத்தில் விரைவு ரயில் மோதியதில் 4 தமிழர்கள் பலி

அவ்வாறு சொந்த ஊர் சென்ற மக்கள் விடுமுறை முடிந்து சனி, ஞாயிற்றுகிழமைகளில் மீண்டும் சென்னை திரும்புவர். இந்த நிலையில் அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நாளை(நவ.03) மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் நாளை மாலை 7.15 மணிக்கு மதுரையிலிருந்தும், இரவு 10.50 மணிக்கு திருச்சியிலுருந்தும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார் மீது லாரி மோதல்! 60 ஆம் கல்யாணத்துக்கு திருக்கடையூர் சென்ற தம்பதி பலி!

காளமாடனும் சாதிக் கலவரங்களும்... பைசன் - திரை விமர்சனம்

உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

வடசென்னையின் உலகம்... அரசன் புரோமோ!

தே.ஜ. கூட்டணி வென்றால் பிகாருக்கு புதிய முதல்வர்? அமித் ஷா சூசகம்!

SCROLL FOR NEXT