திருவாரூர்- நவ.13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாம்பவானோடை தர்கா கந்தூரி விழா திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேக்தாவூது ஆண்டவரின் தர்கா உள்ளது. ஆண்டுதோறும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
14 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா முழுவதிலிருந்தும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்கள் உள்ளிட்ட மாற்று மதத்தினரும் பங்கேற்பார்கள்.
Advertisement
Advertisement
எண்ணெய் ஏற்றுமதியைக் குறைக்கும் இராக்!
இதையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச.7ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.