முகப்பு
தமிழ்நாடு

சென்னை, 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று(நவ.04) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 4 நவம்பர், 2024 at 3:18 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று(நவ.04) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்திருப்பதாவது, தென் கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (நவ.4) முதல் சனிக்கிழமை (நவ.9) வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.4) மற்றும் செவ்வாய்க்கிழமை (நவ,5) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →