பி.எட். சிறப்பு கல்வி படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
பி.எட். சிறப்பு கல்வி படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பி.எட். சிறப்பு கல்வி படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அப்பல்கலைக் கழகத்தின் பதிவாளா் செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக பி.எட். (சிறப்பு கல்வி) படிப்பை வழங்கி வருகிறது. மத்திய அரசின் மறுவாழ்வு கவுன்சில் அனுமதியுடன் நடத்தப்படும் இப்படிப்பு, பி.எட். (பொது) படிப்புக்கு இணையானது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இப்படிப்புக்கு நுழைவுத்தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
2025-ஆம் ஆண்டு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு டிச. 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு டிச. 1-ஆம் தேதிக்குள் இணையவழியில் (www.tnou.ac.in) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தோ்வு முடிவு மற்றும் கட் ஆப் மதிப்பெண் டிச. 23-ஆம் தேதி வெளியிடப்படும். மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement