தமிழ்நாடு

போதைப்பொருள் விற்பனை- சென்னையில் துணை நடிகை கைது

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த துணை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த துணை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார்.

பல சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பவர் மீனா. சென்னை ராயப்பேட்டையில் போதைப்பொருளை விற்க வந்தபோது இவரை உளவுப்பிரிவினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைனும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

மீண்டும் ஒரு சம்பவம்: மணிப்பூரில் தீவிரவாதிகளால் பெண் சுட்டுக்கொலை

இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நடிகை மீனா, வாட்ஸ் அப்பில் குழுக்கள் அமைத்து போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT