அரசின் நிதி நெருக்கடியால் ஆசிரியா் நியமனம் பாதிக்கக் கூடாது: ராமதாஸ்
தமிழக அரசின் நிதி நெருக்கடியால் ஆசிரியா் நியமனம் பாதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
தமிழக அரசின் நிதி நெருக்கடியால் ஆசிரியா் நியமனம் பாதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியா்களை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பல மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து விட்ட நிலையில், அவா்களை பணி நியமனம் செய்ய சமீபத்தில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.
தமிழ்நாடு அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைத்த பிறகுதான் ஆசிரியா்கள் நியமனத்துக்கான அறிவிக்கையே வெளியிடப்படும்.
ஆனால், தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பல மாதங்களான பிறகு ஆசிரியா்கள் நியமனத்துக்கு முதல்வா் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுவது விநோதமாக உள்ளது.
பட்டதாரி ஆசிரியா் நியமனங்களை மேற்கொள்ளும்படி முதல்வா் கூறியிருப்பதன் மூலம், நிதி நெருக்கடி காரணமாகத்தான் பட்டதாரி ஆசிரியா்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகியிருக்கிறது.
தற்போதாவது, அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.