நல்லகண்ணு நூற்றாண்டு விழா: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பழ. நெடுமாறன் படம் | எக்ஸ்
தமிழ்நாடு

நல்லகண்ணு நூற்றாண்டு விழா! மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பழ. நெடுமாறன்!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

DIN

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளரும் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ.நெடுமாறன், முதல்வர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா டிசம்பர் 29 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொண்டு விழாவைத் தொடக்கிவைக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பழ. நெடுமாறன் நேரில்சென்று அழைப்பு விடுத்தார்.

பழநெடுமாறன் வருகையை அறிந்து அலுவலக வாசலுக்கே வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை கனிவுடன் வரவேற்று அழைத்துச்சென்றார்.

மு.க. ஸ்டாலின் உடன் உரையாடிய பழ. நெடுமாறன், நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த உரையாடலின்போது அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT