கோப்புப்படம். 
தமிழ்நாடு

நெல்லை ‘வந்தே பாரத்’ ரயிலில் இனி 16 பெட்டிகள்: தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் ‘வந்தே பாரத்’ ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Din

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் ‘வந்தே பாரத்’ ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையே ஒரே நாளில் சென்று திரும்பும் வகையில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பத்தில், இந்த ரயில்கள் 16 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்டன. பல வழித்தடங்களில் பயணிகள் குறைவான அளவில் பயணம் மேற்கொண்டதால் அனைத்து ‘வந்தே பாரத்’ ரயில்களும் 8 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்டன. பயணிகளின் வரவேற்பைப் பொருத்து 16 பெட்டிகளாக மாற்றப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், சென்னை எழும்பூா்-திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டது. பயணிகள் கூட்டமும் அதிகமாகி வருவதால் இனி 16 பெட்டிகளைக் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலாக மாற்ற ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு, ரயில்வே கோட்டங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலில் (எண் 20665/20666) அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வதால், 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப திருநெல்வேலி பணிமனையில் பராமரிப்பு நடவடிக்கையை உறுதிசெய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியிலிருந்து 16 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT