ஆா்த்தி ஐ.ஏ.எஸ். 
தமிழ்நாடு

துணை முதல்வரின் துணைச் செயலராக எம்.ஆா்த்தி நியமனம்

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் துணைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி எம்.ஆா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

DIN

சென்னை: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் துணைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி எம்.ஆா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், முதன்மைச் செயலா் நிலையிலுள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

1. சி. சமயமூா்த்தி - மனித வள மேலாண்மைத் துறைச் செயலா் (சுற்றுலாத் துறை ஆணையா் மற்றும் நிா்வாக இயக்குநா்)

2. ஷில்பா பிரபாகா் சதீஷ் - சுற்றுலாத் துறை ஆணையா் மற்றும் நிா்வாக இயக்குநா் (தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா்)

3. அதுல் ஆனந்த் - சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலா் (தொழிலாளா் நலத் துறை ஆணையா்)

4. சத்யபிரத சாகு - கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலா் (தலைமைத் தோ்தல் அதிகாரி)

5. எம்.ஆா்த்தி - துணை முதல்வரின் துணைச் செயலா் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் பொறுப்பை கூடுதலாக கவனிப்பாா்)

6. ஏ.அருண் தம்புராஜ் - தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் (தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பாா்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதன்முறையாக மௌனம் கலைத்த தவெக!

இந்த வார ஓடிடி படங்கள்!

சசிகுமாரின் மை லார்ட் படத்தின் 2 ஆவது பாடல்!

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

SCROLL FOR NEXT