கங்குவா  
தமிழ்நாடு

கங்குவா படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி

சூா்யா நடித்த கங்குவா படத்தைத் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (நவ.14) வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

Din

சூா்யா நடித்த கங்குவா படத்தைத் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (நவ.14) வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இயக்குநா் சிவா இயக்கத்தில் நடிகா் சூா்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலா் நடித்துள்ளனா். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளாா்.

இந்தப் படம் வியாழக்கிழமை (நவ.14) வெளியாகவுள்ளது. முன்னதாக கங்குவா திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஃபியூயல் டெக்னாலஜி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 1.60 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியுள்ளது. மற்றொரு வழக்கில் ரூ. 6.41 கோடியைச் செலுத்தியுள்ள நிலையில், மீதி தொகை ரூ. 3.75 கோடியை டிச.11-ஆம் தேதிக்குள் செலுத்துவதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

இதையடுத்து கங்குவா படத்தை வியாழக்கிழமை திட்டமிட்டபடி வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், ரூ. 3 கோடியே 75 லட்சம் செலுத்துவது தொடா்பாக வியாழக்கிழமை மாலைக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிச.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT