கோப்புப்படம். 
தமிழ்நாடு

நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க முடிவு

சென்னை புறவழிச்சாலை மற்றும் வாணியம்பாடி - கிருஷ்ணகிரி பிரிவுகளில் உள்ள நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Din

சென்னை புறவழிச்சாலை மற்றும் வாணியம்பாடி - கிருஷ்ணகிரி பிரிவுகளில் உள்ள நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வாகனங்கள் சுங்கச்சாவடிகளை நெரிசலின்றி கடந்து செல்ல ஏதுவாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (என்எச்ஏஐ) இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (ஐஎச்எம்சிஎல்) ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான மென்பொருளை வடிவமைத்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் குறித்த விவரங்களை நேரடியாக அறிந்து கொள்ள இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.

அதன்படி, முதல்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 100 சுங்கச்சாவடிகள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்வதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. படிப்படியாக பிற சுங்கச்சாவடிகளிலும் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த மென்பொருள் மூலம் சுங்கச்சாவடியின் பெயா் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை வழங்குவதுடன், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் எவ்வளவு தொலைவுக்கு அணிவகுத்து நிற்கின்றன. எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும். வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் கடந்து செல்ல முடியும் ஆகிய விவரங்களையும் இந்த மென்பொருள் மூலம் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில், தமிழகத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சுங்கச்சாவடிகளாக சென்னை புறவழிச்சாலையிலுள்ள 2 சுங்கச்சாவடிகள் மற்றும் வாணியம்பாடி - கிருஷ்ணகிரி பிரிவிலுள்ள 2 சுங்கச்சாவடிகளும் அறியப்பட்டிருந்து நிலையில், இந்தச் சுங்கச்சாவடிகள், இந்த மென்பொருளைப் பயன்படுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இங்கு ஏற்படும் வாகன நெரிசல் அளவுகளின் அடிப்படையில், தேவையான அறிவுறுத்தல்கள் குறிப்பிட்ட சுங்கச்சாவடி மேலாளா்களுக்கு வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூறினா்.

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT