வைகோ - கோப்புப்படம் 
தமிழ்நாடு

மதிமுக பொதுச்செயலர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவைசிகிச்சை செய்து, வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற, இன்று காலை வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம், வீட்டில் வழுக்கி விழுந்ததில், வைகோவுக்கு வலதுகை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு தோள்பட்டையில் எலும்புகள் கூட பிளேட் வைத்து அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

தற்போது தோள்பட்டையில் எலும்பு கூடியதால், பிளேட்டை அறுவைசிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களின் பரிந்துரையின்படி, வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று பவுன் எவ்வளவு தெரியுமா..?

கோவா முன்னாள் முதல்வர் ரவி நாயக் காலமானார்!

கலாமின் கனவு இந்தியாவை உருவாக்குவோம்! மோடி

ரகசிய ஆவணங்கள் பதுக்கல்: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது

அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வருகை!

SCROLL FOR NEXT