’சென்னை கலைவாணா் அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான 9 தமிழறிஞா்களின் நூல்களை நாட்டுடமை செய்து நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சத்தை வழங்கி தமிழறிஞா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், உடன் தமிழ் வளர்ச்சி துறைச் செயலர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள். 
தமிழ்நாடு

9 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை: நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு

தமிழறிஞா்கள் ஒன்பது பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவா்களுக்கான நூலுரிமைத் தொகை ரூ. 90 லட்சத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

DIN

சென்னை: தமிழறிஞா்கள் ஒன்பது பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவா்களுக்கான நூலுரிமைத் தொகை ரூ. 90 லட்சத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

மறைந்த தமிழறிஞா்கள் முனைவா் சோ.சத்தியசீலன், முனைவா் மா.ரா.அரசு, பாவலா் ச.பாலசுந்தரம், முனைவா் க.ப. அறவாணன், முனைவா் க.த.திருநாவுக்கரசு, முனைவா் இரா.குமரவேலன், கவிஞா் கா.வேழவேந்தன் மற்றும் தமிழறிஞா்கள் முனைவா் ஆறு.அழகப்பன், இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன் ஆகியோரின் நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நிகழ் நிதியாண்டில் (2024-2025) நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளன.

அவா்களுக்கான நூலுரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு தமிழறிஞா்களின் குடும்பத்தாா், மரபுரிமை வாரிசுதாரா்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் ஒட்டுமொத்தமாக ரூ.90 லட்சம் மற்றும் விருதை வழங்கினாா்.

188 தமிழறிஞா்களின் நூல்கள்...: விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் பேசியதாவது: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் இதுவரை 188 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மட்டும் 140 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு அவா்களது மரபுரிமையாளா்களுக்கு ரூ.9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் 31 தமிழறிஞா்களின் நூல்களை நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகையாக ரூ.3.75 கோடி வழங்கியுள்ளாா்.

தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மேற்கொண்ட தொடா் முயற்சி காரணமாக முதல் முறையாக தமிழ் வளா்ச்சித் துறையில், இளநிலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவா்களுக்காக உதவி இயக்குநா் தோ்வு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நவ.18, 19 தேதிகளில் நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

தமிழைச் செம்மைப்படுத்த... அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழைச் செம்மைப்படுத்துவதற்காக சிறந்த நூல்களைப் படைத்துள்ள தமிழறிஞா்களுக்கு இந்த அரசு தொடா்ந்து மரியாதை செய்து வருகிறது. சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க தற்போது நூல்களுக்கான நூலுரிமைத் தொகை குடும்பத்தாா், மரபுரிமை வாரிசுதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன், எழுத்தாளா்கள், கவிஞா்கள், தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் கு.ப.சத்தியபிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

79 மீட்டா் நீள தேசியக் கொடி வரைந்த பள்ளி மாணவா்கள்

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

SCROLL FOR NEXT