முகப்பு
தமிழ்நாடு

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: கடிநெல்வயல் ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் நகராட்சியுடன் கடிநெல்வயல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 18 நவம்பர், 2024 at 8:17 AM
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
பகிர்:

வேதாரண்யம் நகராட்சியுடன் கடிநெல்வயல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி அமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் அருகே உள்ள கிராம ஊராட்சிகளை இணைக்க வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், நகராட்சி சார்ந்துள்ள கடிநெல்வயல் ஊராட்சியும் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற திட்டம்? ஏன்?

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராமத்தினர், ஏற்கெனவே ஊர்க்கூட்டம் நடத்தி ஏக மனதாக எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், கடிநெல்வயல் கடைவீதியில் திங்கள்கிழமை திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு இந்த முடிவை கைவிடாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சித் தலைவரும், எதிர்ப்பு இயக்கத்தின் தலைவருமான கே.வைத்திலிங்கம் தலைமை வகித்தார்.

எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் உறுப்பினர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர் மு. ராஜசேகரன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ஜான்முத்து , சண்.செல்லப்பன், ஜா. ஹெலன், த. மலர்விழி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →